×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் – சபலென்கா பைனலில் பலப்பரீட்சை

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நம்பர் 1 இகா ஸ்வியாடெக்குடன், 2வது ரேங்க் வீராங்கனை அரினா சபலென்கா மோதுகிறார். அரையிறுதியில் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மதோவாவுடன் (26 வயது, 5வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (போலந்து, 21 வயது) 6-1, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று முதல் முறையாக மாட்ரிட் ஓபன் பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

ஸ்வியாடெக் தொடர்ந்து 4வது முறையாக வெரோனிகாவை வீழ்த்தியுள்ளார். மற்றொரு அரையிறுதியில் கிரீஸ் நட்சத்திரம் மரியா சாக்கரியுடன் (27 வயது, 9வது ரேங்க்) மோதிய சபலென்கா (25 வயது) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி 2வது முறையாக மாட்ரிட் ஓபன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்துக்கு நீடித்தது. 2014க்கு பிறகு, டபுள்யு.டி.ஏ 1000 அந்தஸ்து தொடரின் பைனலில் டாப் 2 வீராங்கனைகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் – சபலென்கா பைனலில் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Madrid Open Tennis Sviatek ,Sabalenka ,Madrid ,Iga ,Madrid Open ,Spain ,Madrid Open Tennis ,Sviatek ,Dinakaran ,
× RELATED துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் ஆஸி. ஓபன் சாம்பியன் சபலென்கா அதிர்ச்சி தோல்வி