×

ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான்: அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; “புனையப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு செவிமடுக்காமல் வளர்ச்சியை நோக்கி செல்வதுதான் இந்த திராவிட மாடல் அரசு. ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான். தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.

அவர் எத்தனை பெரிய சவால்களையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர். இதுபோன்ற பேச்சுகளால் எங்கள் வளர்ச்சி தடைபடாது. குறைகளை நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம். வடசென்னை மேம்பாட்டிற்கு ஆயிரம் கோடி ரூபாய் 3 ஆண்டுகளில் செலவிடப்படும். உழைக்கும் தொழிலாளர்களின் உயர்வுக்காகவும், இளைஞர்களின் மேம்பாட்டுக்காகவும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

The post ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான்: அமைச்சர் சேகர்பாபு! appeared first on Dinakaran.

Tags : RN Ravithan ,Governor ,Governor's House ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Shekhar Babu ,RN ,Ravithan ,
× RELATED ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது