×

பசங்க பட இயக்குனர் பாண்டியராஜனிடம் நிலம் விற்பதாகக் கூறி ரூ.1.89 கோடி மோசடி: ஒருவர் கைது

சென்னை: பசங்க பட இயக்குனர் பாண்டியராஜனிடம் நிலம் விற்பதாகக் கூறி ரூ.1.89 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த குமார் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாண்டியராஜன் என்பவருக்கு எதிரி குமார் என்பவர் ‘புதுக்கோட்டை சிப்காட் அருகில் வெள்ளனுார் கிராமம் பட்டா எண். 481 -ல் ஒரு ஏக்கர் எண்பத்தி மூன்று சென்ட் நிலம் இருப்பதாகச் சொல்லி அதில் 27 சென்ட்டை மட்டும் பதிந்து கொடுப்பதற்கு ரூ.40,00,000 விலை பேசி, அதில் ரூ.23,00,000 ரொக்கமாக கையில் பெற்றுக் கொண்டு, மீதத் தொகை ரூ. 17,00,000-த்தையும் 02.07.2013 ஆம் தேதி Axis வங்கிக் கணக்கு எண். 911020032507608 இருந்து, மேற்படி குமார் அவரது வங்கிக் கணக்கு மூலமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த இடத்தின் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் விபரத்தை மறைந்து புதுக்கோட்டை சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் 02.07.2013 ம் தேதி பதிவு செய்து மோசடி செய்துள்ளார்

மேலும் கடந்த 11.12.2019 அன்று மேற்படி SFS பள்ளி அருகே உள்ள டவுன் வார்டு எண் 39 ல் வீட்டு மனையிடம் 69840 சதுரடி இருப்பதாகச் சொல்லி, வீடு கட்டுவதற்கு இந்த இடத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி, ரூ. 75,00,000 ரொக்கமாக சென்னை சாலிகிராமம் மனோஜ் குமார் என்பவர் முன்னிலையில் வைத்து பணம் பெற்றும், மேற்படி குமார் கிரைய அக்ரிமெண்ட் ரூ.50 பத்திரத்திரம் மூலம் கொடுத்துள்ளார். பிறகு அந்த இடத்திற்கே 17.06.2020 ஆம் தேதி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.25,00,000/- த்தை RTGS மூலம் குமார் பெற்றுள்ளார் நாளது தேதி வரை அந்த இடத்தை பதிந்து தரவில்லை அந்த இடத்தில் சென்று போய் பார்த்தால், வேறு நபர்கள் வீடு கட்டி உள்ளார்கள் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேற்படி குமார் அவசரத் தேவை என்று அவரது நண்பர் மணி என்பவர் வங்கிக் கணக்கில் RTGS மூலம் ரூ.15,00,000 பெற்றுள்ளார். ஆக மொத்தம் ரூ.1,89,50,000 பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக பத்திரப்பதிவு செய்யாமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியுள்ளார் என புகார் அளித்துள்ளார்.

The post பசங்க பட இயக்குனர் பாண்டியராஜனிடம் நிலம் விற்பதாகக் கூறி ரூ.1.89 கோடி மோசடி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pandiarajan ,Pasanga ,Chennai ,Panchanga ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது