×

உயர்கல்வித்துறை பற்றி தவறான தகவலை தெரிவித்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைச்சர் பொன்முடி பேட்டி..!!

சென்னை: சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர்,:பொறியியல் ,கலை அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக், பி.ஆர்.க் போன்ற படிப்புகளில் சேர ஜூன் 4ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். s://www.tneaonline.org , www.tndte.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 446 பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 7ம் தேதி வெளியிடப்படும். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்படும். கடந்த ஆண்டு புதுமைப் பெண் திட்டத்தால் மாணவிகள் சேர்க்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.

உயர்கல்வித்துறை பற்றி ஆளுநர் தவறான தகவல்

தொடர்ந்து ஆளுநர் குறித்து பேசிய அவர் உயர்கல்வித்துறை பற்றி தவறான தகவலை தெரிவித்து வருகிறார் ஆளுநர் ஆர் .என்.ரவி சென்னை பல்கலைக்கழகம் 10வது இடத்தில் இருந்து 100 வது இடத்துக்குச் சென்றதாக ஆளுநர் கூறியது தவறான தகவல். சர்வதேச அளவில் 547-வது இடத்திலும், இந்திய அளவில் 12-வது இடத்திலும் சென்னை பல்கலை கழகம் உள்ளது என அமைச்சர் விளக்கமளித்துள்ளார். நாட்டில் உள்ள கல்லூரிகளில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 53 சதவீதம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர தமிழ்நாட்டையே தேர்வு செய்கின்றனர்.

சனாதனம்தான் காலாவதியான கொள்கை

காலாவதியான கொள்கை சனாதனம்தான்; திராவிட மாடல் அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு நிர்வாகத்தை நடத்துபவராகத் தான் ஆளுநர் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய திராவிட கொள்கை இனி இந்தியா முழுவதும் பரவும்.

The post உயர்கல்வித்துறை பற்றி தவறான தகவலை தெரிவித்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைச்சர் பொன்முடி பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Minister ,Ponmudi ,Chennai ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து