×

வெள்ளைத்திரி கடத்தியவர் கைது

 

விருதுநகர், மே 5: வச்சக்காரப்பட்டி போலீசார் கோவிந்தநல்லூர் அருகே நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்கு பையுடன் சென்ற சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சுந்தர மூர்த்தியை போலீசார் அழைத்தனர். அப்போது அவர் தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து சாக்குப்பையை சோதனையிட்டனர்.அதில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட வெள்ளைத்திரி இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2 ஆயிரம் ஆகும். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வெள்ளைத் திரிகளை பறிமுதல் செய்தனர்.

The post வெள்ளைத்திரி கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Vachakkarapatti police ,Govindanallur ,Dinakaran ,
× RELATED பொருளாதாரத்தில்...