×

மழையால் பருத்தி விலை வீழ்ச்சி

 

இளையான்குடி, மே 5: இளையான்குடி வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாலைக்கிராமம், சாத்தனூர், சமுத்திரம், விரையாதகன்டன், அளவிடங்கான், கரும்பு கூட்டம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி ரூ.105 முதல் ரூ.110 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால் நடப்பாண்டில் அதிகபட்சமாக கடந்த வாரம் பருத்தி கிலோ ரூ.65க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இளையான்குடி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கோடை மழை கடுமையாக பெய்து வருகிறது. இதனால் பருத்தி மேலும் விலை குறைந்து கிலோ ரூ.58க்கு, கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை வீழ்ச்சியால் பருத்தி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

The post மழையால் பருத்தி விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Saligram ,Chatanur ,Samudram ,Dinakaran ,
× RELATED இளையான்குடியில் திருச்செந்தூர் பக்தர்களுக்கு மாற்று மதத்தினர் வரவேற்பு