×

ஈரோடு மரப்பாலம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

 

ஈரோடு,மே.5: ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. ஈரோடு மரப்பாலம், குயவன்திட்டு பகுதியில் ஓடை புறம்போக்கில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து செய்து கட்டப்பட்டிருந்தது. இந்த வீடுகளை அகற்றக்கோரி ஏற்கனவே மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்றபோது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 4 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது. முன்னதாக ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது உடைமைகளை வெளியே எடுத்து கொண்டு வந்தனர். மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகவடிவு மேற்பார்வையில் இளநிலை உதவி பொறியாளர் செந்தாமரை முன்னிலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள மேலும் 12 வீடுகளை அகற்ற சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் உரிய காலஅவகாசத்திற்கு பிறகு வீடுகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

The post ஈரோடு மரப்பாலம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Marapalam ,Erode ,Erode Corporation ,Erode Marapalam ,Kuyavanthittu ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலினால்...