×

இலவச சீருடைகள் தரம் பார்ப்பு சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் போக்சோவில் கைது

 

கோபி,மே.5: கோபி அருகே சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோபி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 27ம் தேதி அருகே உள்ள கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, சிறுமியை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த வாசுதேவன்,சிவக்குமார்,மோகன் ஆகியோர் சிறுமியை தூக்கிச் சென்று, சிவக்குமார் வீட்டில் வைத்து பலாத்காரம் செய்ததோடு, வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் மறுநாளும் சிறுமியை மிரட்டி அதே வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தனர்.

சிறுமி சோர்வாக இருப்பது கண்டு பெற்றோர் விசாரித்த போது, 3 பேர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும், சிறுமியின் பெரியப்பா குணசேகரன் என்பவரும் கடந்த 3 மாதமாக சிறுமியை மிரட்டி பாலத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் பெரியப்பா குணசேகரன் மற்றும் வாசுதேவனை கைது செய்த போலீசார்,தலைமறைவாக இருந்த இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் கவுந்தப்பாடி அருகே உள்ள கொட்டாப்புளிமேட்டை சேர்ந்த சிவக்குமாரை (24) காஞ்சிக்கோயில் பகுதியில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இலவச சீருடைகள் தரம் பார்ப்பு சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Free Uniforms Dharam Barhu ,Gobi ,
× RELATED மின்சார வேலியில் சிக்கி யானை பலி