×

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க 12 ஆண்டுக்குபின் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் அமைச்சர்

பெனாலியம்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் நிலவி வரும் கடும் விரிசலுக்கு இடையே ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரி நேற்று கோவா வந்தார். எல்லைத்தாண்டிய தீவிரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது, ஜம்மு காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு காரணங்களால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு சுமூகமாக இல்லை. இந்நிலையில் கோவாவில் நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ நேற்று இந்தியா வந்தார்.

2011ம் ஆண்டுக்கு பின் இஸ்லாமாபாத்தில் இருந்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறுகையில்,‘‘ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்துவதற்காக கோவா வந்தடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஷங்காய் ஓத்துழைப்பு வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாடு வெற்றிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார். கோவாவில் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்திப்பதற்காக எந்த திட்டமும் இல்லை என கூறப்படுகின்றது.

* பாக்.பிரதமர் டிவிட்
பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவில் நடைபெறும் ஷங்காய் ஒத்தழைப்பு அமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பாகிஸ்தானின் முடிவு ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம் மற்றும் பாகிஸ்தானின் பன்முக தன்மைக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

The post ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க 12 ஆண்டுக்குபின் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Minister ,India ,Shanghai Cooperation Conference ,Pakistan ,Foreign Minister ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...