×

ஜம்மு ஆற்றில் ராணுவஹெலிகாப்டர் விழுந்து அதிகாரி பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வாத் மாவட்டத்தில் உள்ள மார்வா பகுதியில் ஆற்றில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது . கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் விபத்தில் சிக்கியது. இதனை பார்த்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த தொழில்நுட்பவியலார் உயிரிழந்தார். இதில் இருந்த விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஜம்மு ஆற்றில் ராணுவஹெலிகாப்டர் விழுந்து அதிகாரி பலி appeared first on Dinakaran.

Tags : Jammu ,Marwa ,Kistwad district ,Jammu and Kashmir ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...