×

உபியில் போலீஸ் என்கவுன்டர் பிரபல தாதா சுட்டு கொலை

மீரட்: உபி மாநிலத்தில் நேற்று நடந்த போலீஸ் என்கவுன்டரில் பிரபல தாதா சுட்டு கொல்லப்பட்டார். உபி.யின் கவுதம் புத்தா நகர் மாவட்டம் பதல்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட துஜானா கிராமத்தை சேர்ந்தவன் அனில் துஜானா. பிரபல தாதாவான அனில் மீது கொலை, பணம் கேட்டு மிரட்டல் உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவனை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மீரட்டில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் அனில் துஜானா சுட்டு கொல்லப்பட்டான். ஏற்கனவே உபியில் முன்னாள் எம்பி அதிக் அகமது, அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் அடுத்தடுத்து 2 நாட்களில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு நடந்த அடுத்த என்கவுன்டர் இதுவாகும். இந்த சம்பவம் உபியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post உபியில் போலீஸ் என்கவுன்டர் பிரபல தாதா சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : UP ,Gautam Buddha Nagar ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...