×

அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்: கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை

திருத்தணி: திருவலாங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் சரண்யா (35). இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் முரளி (40). இவர் தனது மனைவிக்குப் பதில் ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் முரளி தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. உதாரணமாக, கிராம நிர்வாக அலுவலர் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கும் போது, அவரது கையெழுத்தை கிராம சபை கூட்ட தீர்மான புத்தகத்தில் போட விடாமல் முரளி தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலருக்கும், முரளிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன், இருதரப்பினர் இடையே சமரசம் செய்ய முயற்சித்தார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரனை தரக்குறைவாக பேசியும், கிராம சபைக் கூட்ட தீர்மான புத்தகத்தில் கையெழுத்திடக் கூடாது எனவும் முரளி எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி செயலாளரிடம் இருந்த நோட்டு புத்தகத்தை பறித்துக் கொண்டு சென்றார். மேலும் இந்த ஊராட்சியில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர்களை பணி செய்ய விடாமல் தொடர்ந்து முரளி அச்சுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அருங்குளம் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன், கனகம்மாசத்திரம் போலீசில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முரளி, தன்னை அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும், அச்சுறுத்தி வருவதாகவும் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்: கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ganagamasatram ,Thiruthani ,Saraniya ,Thiruvalangadu Union Arungulam Puratsi Forum ,Kanagamashtam ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...