×

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்பட்டும்: பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு

சென்னை:ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள 15 நபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்பட்டு என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஹிஜாவு நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2000 கோடிக்கு மேல் மோசடி செய்தது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 14,126 முதலீட்டாளர்களிடம் ரூ.1,046 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

பொருளாதார குற்றப்பிரிவினர் தொடர்ந்து அதிக வட்டி தருவதாக கூறி வசூல் செய்து மோசடி செய்த பல்வேறு வழக்குகள் தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎப்.எஸ். உள்ளிட்ட 16 வழக்குகளில் கைது நடவடிக்கைகளையும், மோசடி பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேரின் புகைப்படங்களை வெளியீட்டு அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ள 15 பெரும் பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.2000 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ஒரு.1 லட்சத்திற்கு 15% வட்டி என்ற அடிப்படையில், தருவதாக பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் கூட்டம் நடத்தி இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுவரை 14,126 முதலீட்டாளர்களிடம் ரூ.1,046 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.90 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் முக்கிய நிர்வாகிகள் வெளிநாடு தப்பிச்சென்றிருப்பதால்அவர்களை பிடிப்பதற்கான ரெட் கார்னர் நோட்டிஸும், லுக் அவுட் நோட்டிஸும் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குறித்த தகவலை பொருளாதார குற்றபிரிவு போலீசார் தேடிவந்த நிலையில், இவர்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியும்பட்சத்தில் அவர்கள் உடனடியாக தங்களை தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்பட்டும்: பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hijau ,Economic Offenses ,Chennai ,Hijavu financial institution ,
× RELATED திருச்செங்கோடு அருகே கூட்டுறவு...