×

கோவாவில் நடக்கும் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை.!

கோவா: முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியா வருகை தந்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கோவாவின் டபோலிமில் உள்ள விமான தளத்தில் வந்து இறங்கினார்.

லாகூர், ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. ஷங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டம் இன்றும், நாளையும் கோவாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த, அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அதன்பின்னர், பாகிஸ்தானில் இருந்து அரசு சார்பாக யாரும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த சமயத்தில், 12 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாரி இந்தியா வருகை தந்துள்ளார்.

The post கோவாவில் நடக்கும் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை.! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Foreign Minister ,India ,Foreign Ministers Conference ,Goa. ,Goa ,Bilawal Bhutto Zardari ,Dinakaran ,
× RELATED அதிக வரிவிதிப்பால் 2019 முதல்...