×

மண்ணடி பிஆர்என் கார்டன் பகுதியில் பழுதடைந்த குடியிருப்பை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட முடிவு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

தண்டையார்பேட்டை: மண்ணடி பிஆர்என் கார்டன் பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட முடிவு செய்து இருப்பதால், அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். சென்னை பிராட்வே மண்ணடி பகுதியில் உள்ள பிஆர்என் கார்டன் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பழுதடைந்து இருப்பதால் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்கனவே இந்த பகுதியில் ஆய்வு செய்தார்.

பின்னர், புதிதாக குடியிருப்பு கட்ட முடிவு செய்து குடியிருப்புவாசிகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பழுதடைந்த குடியிருப்புகளை ஆய்வு செய்தார். அப்போது பிஆர்என் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு புதிய கட்டிடம் கட்டுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி

வித்தார். ஆய்வின்போது, சென்னை மாநகர மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் அபூர்வா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மண்டலக்குழுத்தலைவர் ராமுலு, கவுன்சிலர் பரிமளம் மற்றும் அதிகாரிகள், திமுகவினர் உடனிருந்தனர்.

The post மண்ணடி பிஆர்என் கார்டன் பகுதியில் பழுதடைந்த குடியிருப்பை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட முடிவு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Garden ,PRN ,Minister ,B. K.K. Segarbabu ,PRN Garden ,Landy PRN ,Dinakaran ,
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!