×

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் 15 பேரின் புகைப்படங்கள் வெளியிட்டது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை

சென்னை: ஹிஜாவு என்ற சென்னையை சார்ந்த தனியார் நிறுவனமானது அதன் தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள், சேர்ந்து பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு மாதம் 15 சதவீதம் வட்டித்தொகை அளிப்பதாக பொய்யான வாக்குறுதி அளித்து, முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததின் அடிப்படையில் அன்று அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னையின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அந்நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்து, அதில் பெரும் இலாபம் கிடைக்கும் என்று அறிவித்து, அதனால் பொதுமக்கள் தங்கள் நிறுவனங்களில் முதலீடுகள் செய்து பயன் பெறலாம் என்று அறிவித்துச் செயல்பட்டு வந்துள்ளன. இவற்றில் சென்னையைத் தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வந்த ஹிஜாவு அசோசியெட் பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனம் மிக முக்கியமானது ஆகும். இந்த நிறுவனம் பொதுமக்களிடம் பெறப்படும் முதலீடுகளுக்கு மாத வட்டியாக 15 சதவீதம் வழங்குவதாக அறிவித்து பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெறுவதற்காக இக்கம்பெனிகள் முகவர்களையும், பணியாளர்களையும் நியமித்து, பல்வேறு ஊர்களில் உள்ள ஆடம்பர நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்கள் நடத்தி, அதில் பொதுமக்களைக் கவரும் வகையில் இந்நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆசை வார்த்தைகளைக் கூறிப் பேசியுள்ளார்கள்.

ஆனால், எந்தவொரு முதலீட்டுத் திட்டமும் இல்லாமல் இந்நிறுவனங்களில் முதலாவதாக முதலீடு செய்தவர்களின் பணத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கே மாதவட்டியைக் கொடுத்துள்ளனர். பிறகு அடுத்தபடியாக முதலீடு செய்யும் பொதுமக்கள் பணத்தைப் பயன்படுத்தி முந்தைய முதலீடு செய்தவர்களுக்கு வட்டியை வழங்கியுள்ளனர். இது “PONZI Scheme” எனக் கூறப்படும் வகையைப் போன்றதாகும். ஆனால், அதன் முதலீட்டாளர்களுக்கு மாத வட்டியையும் மற்றும் முதலீட்டுத் தொகைகளையும் முறையாக திரும்பத் தரவில்லை எனத் தெரியவந்தது. ஹிஜாவு நிறுவனம் குறித்து சென்னை காவல்துறையினருக்கு புகார்கள் வரப்பெற்றது. அதன் பொருளாதாரக் குற்றப் பிரிவு அடிப்படையில் எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு விசாரணை சம்பந்தமாக சென்னை, விருகம்பாக்கம், அண்ணா நகர், பாடி. கொரட்டூர், வியாசர்பாடி, போரூர், வில்லிவாக்கம். கீழ்பாக்கம், திருவேற்காடு. பல்லாவரம், அடையார், வடபழனி, முகப்பேர், கோடம்பாக்கம், செனாய் நகர், அரும்பாக்கம், தண்டலம், ஆகிய 42 இடங்களில் ஹிஜாவு அஸோஸியேட்ல் பிரைவேட் லிமிடெட் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகிய இடங்களிலும் அதன் தொடர்ச்சியாக வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களிலும் பொருளாதாரக் குற்றப் பிரிவுக் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், சுமார் 14126 பொதுமக்கள் இந்நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன் மொத்தத் தொகை சுமார் ரூ. 1046 கோடி என தெரியவருகிறது. ஹிஜாவு அஸோஸியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வழக்கின் விசாரணை அதிகாரியிடம் adspeowhijau@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் 15 பேரின் புகைப்படங்கள் வெளியிட்டது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Economic Guilty Police ,Hijaw ,Chennai ,Hijau ,Economic Crime Police ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...