- புது தில்லி உயர் நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- எடப்பாடி பழனிசாமி
- தில்லி
- எடபடி பாலனிசாமி
- தில்லி உயர் நீதிமன்றம்
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி 6 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ், எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் வழக்கின் சாராம்சம். இந்த வழக்கை அதிமுகவை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்திருந்தார்கள். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தையும் அங்கீகரித்தது. இதனை எதிர்த்து மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்கள். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததையும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராம்குமார், கே.சி.சுரேன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கின் விசாரணையில் தற்போது வரை எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, தேர்தல் ஆணையம் மற்றும் எடப்பாடி பழனிசாமி 6 வாரத்தில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளார். 6 வாரத்திற்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
The post அதிமுக வழக்கு: தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி 6 வாரத்தில் பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.
