×

பிடாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

நாகப்பட்டினம்,மே4: திருமருகல் அருகே அகரக்கொந்தகை பிடாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா நடந்தது. திருமருகல் அருகே அகரக்கொந்தகையில் பிடாரி அம்மன், வீரனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி காவடி வீதி உலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதில் மூன்று தேர்கள் வீதி உலா, எல்லை சுற்றுதல், தேர் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பூத சிலைகள் வீதிஉலா, வேண்டுதல் சிலைகள் வீதிஉலா இன்று (4ம் தேதி) இரவு நடைபெறுகிறது. இந்த திருவிழா நாளை(5ம் தேதி) நிறைவு பெறுகிறது.

The post பிடாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Pidhariyamman temple festival ,Nagapattinam ,Agarakonthakai Pitariyamman temple election ceremony ,Thirumarukal ,Pitari ,Amman ,Veeranar Temple ,Agarakonthakai ,Thirumarugal ,Pitariyamman Temple ,Thertruvizha ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...