×

(தி.மலை) 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி பால் வியாபாரி பலி: 2 பேர் படுகாயம்

சேத்துப்பட்டு மே ,4,: சேத்துப்பட்டு அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கீழ்பென்னாத்துரை சேர்ந்த பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
சேத்துப்பட்டு அடுத்த கிழக்கு மேடு கூட்ரோட் அருகே கீழ்பென்னாத்தூர் அண்ணா தெருவை சேர்ந்தபால் வியாபாரி சங்கர் வயது (53). இவர் போளூர் அடுத்த சனிக்கவாடி கிராமத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். சேத்துப்பட்டு வ.உ.சி தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் மணிகண்டன் (23), அவரது நண்பர் சக்திவேல்(25) இருவரும் நேற்று போளூர் நோக்கி பைக்கில் சென்றபோது முன்னால் சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது எதிரே வந்த பைக் சங்கர் மீது மோதியது. இதில் பலத்த காயத்துடன் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் மணிகண்டன், சக்திவேல் இருவரும் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சங்கர் உறவினர் கீழ்பென்னாத்தூர் ஆறுமுகம் ேசத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், அண்ணாமலை, வேலு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post (தி.மலை) 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி பால் வியாபாரி பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,Sethupattu ,Kilpennathur ,
× RELATED (தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய...