சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இன்று இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில், நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர், நாளை அதிகாலை 3.45 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் சென்றடையும்.
மேலும், விழுப்புரத்தில் இன்று இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும், பின்னர், அதிகாலை திருவண்ணாமலையில் 3.30 மணிக்கு பறப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். அதேபோல், 5ம் தேதி காலை 9.15 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு, 11 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர், பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு, பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.இது தவிர, விழுப்புரம் – திருப்பதிக்கு தினசரி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது. நேர மாற்றம் இல்லாமல் வழக்கமான கால அட்டவணைப்படி இந்த ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமி முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

The post இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.