×

எஸ்பிகே பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி

 

திருச்செங்கோடு, மே 4: சிறுதானியங்கள் பயன்பாடு குறித்து, எஸ்பிகே பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்வதேச அளவில் சிறுதானியங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை பல மடங்கு அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் குறிக்கோள். இந்த மாபெரும் குறிக்கோளை பறைசாற்றும் விதமாக, திருச்செங்கோடு எஸ்பிகே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்கள் 75 பேர், இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளியில் இருந்து புறப்பட்டு தோ.கவுண்டம்பாளையம், ஐந்துபனை மற்றும் காடச்சநல்லூர் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் தமிழ்நாடு என்சிசி சேலம் பட்டாலியன் படைப்பிரிவின் கீழ் என்சிசி அதிகாரிகள் மற்றும் படைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் செங்கோடன், தலைவர் பிரபுக்குமார் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

The post எஸ்பிகே பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Awareness ,SPK ,Tiruchengode ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் கேர் அறக்கட்டளை...