×

மண் குவியலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

 

அரூர், மே 4: அரூரில் இருந்து எச்.ஈச்சம்பாடி வழியாக, மொரப்பூர் செல்லும் சாலையில், கீழ்மொரப்பூரில் இருந்து மருதிப்பட்டி வரை, ஒரு மாதத்திற்கு முன், சாலையோரத்தில் பொக்லைன் வாகனம் மூலம் குழிதோண்டப்பட்டு கேபிள் பதிக்கப்பட்டது. தொடர்ந்து, பணிகள் முடிவடைந்த நிலையில், சாலையோரத்தில் பெரிய சைஸ் கற்கள் மற்றும் மண் குவியலாக கிடக்கிறது.

இந்நிலையில் சாலை குறுகலாக உள்ளதால், எதிரே வரும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு வழிவிடும் போது, டூவீலர் ஓட்டிகள், கற்கள் மற்றும் மண் குவியலில் இறங்க வேண்டி உள்ளது. அப்போது மண் சறுக்கி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சாலையோரங்களில் உள்ள மண் குவியலை சீரமைத்து. விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண் குவியலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Aroor ,H.Chambadi ,Morapur ,Kilimorapur ,Marutipatti ,Dinakaran ,
× RELATED 517 பள்ளிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் விநியோகம்