×

தொழிலாளி கொலை வழக்கு விவகாரம் ஓசியில் சாராயம் கேட்டதால் அடித்து கொன்றோம்

 

வில்லியனூர், மே 4: வில்லியனூர் அருகே கூலித்தொழிலாளியை அடித்து கொலை செய்த வழக்கில் உறுவையாறு பகுதியை சேர்ந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த சின்னக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் மகன் ஐய்யப்பன் (36). வில்லியனுார் அடுத்துள்ள உறுவையாறு சாராயக்கடையில் கடந்த 1ம் தேதி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள ஐய்யனார் கோயிலில் பதுங்கி இருந்த உறுவையாறு செல்வா நகரை சேர்ந்த ராசு மகன் முருகன் என்கிற பட்ட முருகன் (21), ஆச்சாரியபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் அருண் என்கிற கார்த்தி (22), உறுவையாறு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பிரதீப் (19), உறுவையாறு மங்கலம் சாலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்தோஷ் (20) மற்றும் உறுவையாறு நத்தைமேடு பரமசிவம் மகன் பச்சையப்பன் (19) ஆகிய 5 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சாராயக்கடையில் சாராயம் குடிக்க சென்றபோது எங்களிடம் வந்து ஓசியில் சாராயம் வாங்கி கொடுக்குமாறு நச்சரிச்சதால் ஆத்திரமடைந்து ஐய்யப்பனை அடித்து உதைத்தாகவும், அதில் எதிர்பாராத விதமாக அவர் இறந்துவிட்டார் என வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தொழிலாளி கொலை வழக்கு விவகாரம் ஓசியில் சாராயம் கேட்டதால் அடித்து கொன்றோம் appeared first on Dinakaran.

Tags : OC ,VILLIANUR ,Ale ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...