×

மதுரைக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி

 

அழகர்கோவில், மே 4: மதுரை மாவட்டம் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர் கோவிலில் சித்திரை திருவிழாக்காக கள்ளழகர் நேற்று மாலை மலைச்சாரலுடன் கோவிந்தா.. கோவிந்தா…என்ற கோஷத்துடன் மக்கள் வெள்ளத்தில் மதுரைக்கு 6.59 மணி அளவில் புறப்பட்டார். இந்த ஆண்டு குதிரை மற்றும் காளை உள்ளிட்டவை கொண்டப்ப நாயக்கர் மண்டபம் அருகே அழகரை வரவேற்றது. அழகர் மதுரைக்கு புறப்படுவதையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி கதவு பல்வேறு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அழகர் மதுரைக்கு கிளம்பும் நிகழ்ச்சியில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ வைகை செல்வன், எம்எல்ஏக்கள் வெங்கடேசன், பூமிநாதன், ராஜன் செல்லப்பா, அ.வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்,மாநகராட்சி ஆணையர், இந்து சமய மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை ,அழகர்கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் காவல்துறை தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க்,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்,விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மதுரைக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Alaghar temple ,Kallaghar ,Chitrai festival ,Alaghar ,Tirumaliruncholai ,
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்