×

கூவமூலை செட்டிவயல் பகுதியில் கனமழைக்கு தரைப்பாலம் உடைப்பு

 

பந்தலூர், மே 4: பந்தலூர் பகுதியில் பெய்த கனமழைக்கு கூவமூலை பகுதியில் தரைப்பாலம் உடைந்து பாதிப்பு ஏற்பட்டது. பந்தலூர் கூவமூலா செட்டிவயல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பந்தலூர் மற்றும் உப்பட்டி போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு தரைபாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைபாலம் உடைந்து சாலை துண்டிக்கபட்டது. அதனால் அப்பகுதி மக்கள் நடந்து செல்ல இயலாமல் அவதிக்குள்ளனார்கள்.

எனவே விரைவில் இந்த தரைபாலத்தை சரி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கனமழைக்கு அய்யன்கொல்லி ஐயப்பன் கோவில் அருகே அய்யன்கொல்லியில் இருந்து அம்பலமூலா செல்லும் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று அதிகாலையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

The post கூவமூலை செட்டிவயல் பகுதியில் கனமழைக்கு தரைப்பாலம் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Causeway ,Koovamoolai Chettivyal ,Pandalur ,Koovamoolai ,Pandalur… ,Couvamoolai Chettivyal ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்