×

ஈரோடு வணிகர் மாநாட்டில் பங்கேற்க மஞ்சூர் கடைக்காரர்கள் முடிவு

 

மஞ்சூர், மே 4: ஈரோட்டில் நடைபெறும் வணிகர் மாநாட்டில் பங்கேற்பதென அனைத்து கடைக்காரர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் புவனேஷ், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாருக் வரவேற்றார். மஞ்சூர் பகுதி கடைக்காரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அப்பர்பவானி பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து சுற்றுலா வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் உள்ள வனிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், பேக்கரி, டீ கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்துள்ள சிறு வியாபாரிகள் போதிய வியாபாரம் இல்லாமல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வியாபாரிகள் மற்றும் மஞ்சூர் பகுதி சுற்றுலா தலங்கள் மேம்படும் வகையில் கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை முள்ளி வழியாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாநில, மாவட்ட தலைமை சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று 5ம் தேதி (நாளை) ஈரோட்டில் நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டிற்கு மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் சங்கத்தின் சார்பில் பங்கேற்பது. இதை முன்னிட்டு நாளை (5ம் தேதி) அனைத்து உறுப்பினர்களும் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சஜி, ராதா கிருஷ்ணன், அம்மன்ரவி, மனோகரன், திலிப்குமார், ஜெயராம், மணி, செந்தில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டர்கள். முடிவில் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post ஈரோடு வணிகர் மாநாட்டில் பங்கேற்க மஞ்சூர் கடைக்காரர்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Manjur ,Erode Merchant Conference ,Manjoor ,Erode traders conference.… ,Erode traders conference ,Dinakaran ,
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை