×

கட்டமைப்பு, முதலீடு, கண்டுபிடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் யோசனை

இஞ்சியோன்: ஆசிய வளர்ச்சி வங்கியின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்கு நாள் பயணமாக தென் கொரியா சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் மீண்டு வருவதற்கான கொள்கைகள் வகுத்தல் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் நேற்று நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசுகையில்,‘‘ கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச பொருளாதாரம் பல்வேறு சோதனைகள் மற்றும் இன்னல்களை சந்தித்து வருகிறது.

நீண்ட கால நீடித்த வளர்ச்சிக்கு கட்டமைப்பு, முதலீடு, கண்டுபிடிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய 4 விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளில் தனியார் முதலீட்டை பங்கு கொள்ள செய்வது அவசியமாகும். கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு முதலீடு மிகவும் முக்கியம். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்’’ என்றார்.

The post கட்டமைப்பு, முதலீடு, கண்டுபிடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் யோசனை appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Incheon ,Union Finance Minister ,Asian Development Bank ,Elise Sitharaman ,
× RELATED மும்பை ரயிலில் பயணிகளுடன் செல்பி எடுத்த நிர்மலா சீதாராமன்..!!