×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் வெரோனிகா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மதோவா தகுதி பெற்றார்.காலிறுதியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (29 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதிய வெரோனிகா (26 வயது, 5வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி வெரோனிகாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெகுலா 6-0 என்ற கணக்கில் கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது.எனினும், கடைசி செட்டில் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாடிய வெரோனிகா 6-4, 0-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 5 நிமிடத்துக்கு நீடித்தது.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் வெரோனிகா appeared first on Dinakaran.

Tags : Madrid Open Tennis ,Veronica ,Madrid ,Women's ,Madrid Open ,Spain ,Dinakaran ,
× RELATED சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்