×

கல்லூரி மாணவியை வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் காதலன் கைது

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.இவரது மகன் ஆஷிக் (20). இவருக்கும் காப்பிக்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு மாதத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி குழித்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு காதலன் ஆஷிக்குடன் சென்றார்.

அவரை வீட்டுக்கு அழைத்து சென்று, பெற்றோருக்கு தெரியாமல் 2 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மாணவியை காணவில்லை என தந்தை புகாரின்படி புதுக்கடை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் மாணவியை காப்பிக்காடு சென்னித்தோட்டம் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு ஆஷிக் தப்பினார். மாணவி புகாரின்படி போக்சோ வழக்கில் ஆஷிக்கை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

The post கல்லூரி மாணவியை வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Marthandam ,SINIVASAN ,Kadavavavavavavam ,Kumari District Marthandam ,ashik ,
× RELATED மார்த்தாண்டம் அருகே பைக் திருட்டு