×

தென்பிராந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் மணிகண்டன் பொறுப்பேற்பு

திருவனந்தபுரம்: தென்பிராந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் பொறுப்பேற்றார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம் ஆகும்.திருவனந்தபுரம் கழக்கூட்டம் ராணுவ பள்ளியிலும், தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் கல்வி பயின்ற இவர், 1986 ஜூன் 7ம் தேதி இந்திய விமானப்படையில் சேர்ந்தார். விமானப்படையின் பல்வேறு வகை ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் 5,400 மணி நேரத்திற்கும் மேல் சென்றுள்ளார்.

சிறப்பாக சேவை புரிந்ததற்கு இவருக்கு குடியரசுத் தலைவர் விருதும், சிறந்த விமானப்படை வீரருக்கான விருதும் கிடைத்துள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள தென் பிராந்திய விமானப்படை தலைமையகத்தில் பொறுப்பேற்ற பின்னர் ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

The post தென்பிராந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் மணிகண்டன் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Air ,Marshal Manikandan ,Air Force ,Commander ,Southern Region ,Thiruvananthapuram ,Air Marshal ,Balakrishnan Manikandan ,Southern Regional Air Force ,Kottayam, Kerala ,Marshal ,Manikandan ,South ,Regional Air ,Force ,
× RELATED அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை...