×

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

சென்னை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மாற்றுப் பாதை அமைப்பது மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார். இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறையானது, தனது கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை புரியும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் திருக்கோயிலுக்கு மாற்றுப் பாதை அமைத்தல் தொடர்பாக வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அறநிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் மாற்றுப்பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படுகின்ற 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டிடம், யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்களின் கட்டுமான பணிகள், தங்கும் விடுதிகளை புனரமைக்கும் பணிகள், புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, மலைப் பாதையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி, திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

The post திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tirutani ,Subramanian Swami Temple ,Minister ,Sekarbabu ,Chennai ,Tirutani Subramanian Swami Temple ,Segarbabu ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி