×

கோவையில் கனமழையால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் திடீர் வெள்ளபெருக்கில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது

கோவை: கோவை மதுக்கரையில் அதிமுக ஆட்சியில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதில் அருகே இருந்த 20 மீட்டர் சாலையும் முழுமையாக மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. நேற்றிரவு கோவையில் கொட்டி தீர்த்த கனமழையால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மதுக்கரை ஆற்று விநாயகர் கோயில் அருகே இருந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு அருகே இருந்த குறும்பாளையம் செல்லும் 20 மீட்டர் தார் சாலையும் முழுமையாக உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

அத்துடன் மதுக்கரை சாலையில் உள்ள மின்கம்பமும் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் மதுக்கரை தரைப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இதில் மழை நீர் செல்வதற்கு போதிய வழியை ஏற்படுத்தாமல் அவசரகதியில் பணிகள் முடிக்கப்பட்டதே போதிய வெள்ள பாதிப்புக்குகாரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தரைப்பாலம் மற்றும் சாலை அடித்து செல்லப்பட்ட பகுதிகளில் நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர் உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் தரைப்பாலத்திற்கு முன்னதாக தடுப்பணை கட்டவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post கோவையில் கனமழையால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் திடீர் வெள்ளபெருக்கில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Manjappallam river ,Govai ,Gowi Bar ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!