×

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை..!!

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்தியாவினை சேர்ந்த வங்கி அல்லாத நிதி நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் பல்வேறு கடன்களை வழங்கி வருகின்றது. குறிப்பாக கோல்டு லோன் என்பது இந்த நிறுவனத்தில் அதிகம். இந்நிலையில், மணப்புரம் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து வைப்பு நிதியை திரட்டக்கூடாது என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி பொதுமக்களிடம் இருந்து மணப்புரம் நிதி நிறுவனம் ரூ.150 கோடி வைப்பு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மணப்புரம் நிதி நிறுவனத்தின் நிறுவனர் வி.பி.நந்தகுமார் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர் விவரம் பெறாமலேயே மணப்புரம் நிதி நிறுவனம் பல கோடி பணப் பரிவர்த்தனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Manippuram Finance Institute ,Thiruchur, Kerala State ,Thiruchur ,Enforcement ,Kerala State ,Bank of India ,Enforcement Department ,
× RELATED திருச்சூர் பூரம் திருவிழாவையொட்டி...