×

40-வது வணிகர் தினத்தை முன்னிட்டு மே 5-ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி

சென்னை: மே 5-ம் தேதி வணிகர் மாநாடு நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே-5ல் 40-வது வணிகர் தினம் உரிமைமுழக்க மாநாடு ஈரோடு டெக்ஸ்வேலி ‘மைதானாத்தில் 5-5-2023 வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தின் அனைத்து வணிகர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், வெளிமாநில வணிக அமைப்பு தலைவர்கள் என அனைவரின் பங்கேற்புடன் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுறு வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாட்டு பிரகடனத் தீர்மானங்களை முன்மொழியஉள்ளார். இம்மாநாட்டில் தமிழக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் வெளிநாடு தொழில் முனைவோர் முதன்மை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழா பேருரையாற்ற உள்ளனர்.

மாநாட்டில் திரளும் லட்சக்கணக்கான வணிகர்களின் வசதி கருதி ஈரோடு டெக்ஸ்வேலி மாநாட்டு திடலில் மிகப் பிரம்மாண்டமான 20 ஏக்கர் பரப்பில் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது. பேருந்து, கார்கள் நிறுத்தும் வசதி, இருசக்கர வாகளங்கள் தனியாக நிறுத்தும் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. வரவேற்புக் குழுவினர், விழாக் குழுவினர், மற்றும் வழிகாட்டு குழுவினரின் வழிகாட்டுதல்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து வணிகர்களுக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை ‘சிற்றுண்டி போன்றவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படுகின்றது வணிக பெருமக்கள் தங்குவதற்கு பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது

மே-5, 40-வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடு தினமாக நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள். மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள், உள்ளிட்ட அனைத்திற்கும் வணிகர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, மே-5 அன்று விடுமுறை அளித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வணிகர்கள் லட்சக்கணக்கில் குடும்பத்துடன் கலந்துகொள்கின்றனர்.

உரிமைகளை இழந்து நிற்கும் வணிகர்களின் உரிமையை மீட்டெடுக்கவும், இன்னலுற்ற வணிகர்களின் துயர்களை துடைத்தெடுக்கவும், நமது வணிக கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், வணிகர் ஒற்றுமையை முன்னிலைப்படுத்தவும், தமிழக வணிகர் உரிமை முழக்க மாநாடு ஈரோட்டில் நிச்சயம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திடும் வகையில் இம்மாநாடு அச்சாரமாய் அமையவுள்ளது என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேட்டி அளித்துள்ளார்.

The post 40-வது வணிகர் தினத்தை முன்னிட்டு மே 5-ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,40th Merchant Day ,Merchant Association ,Wickramaraja ,Chennai ,Merchant Conference ,Merchant Union ,Day ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...