×

சென்னையில் தங்கலான் படப்பிடிப்பில் ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு: உறவினர்கள் தகவல்

சென்னை: சென்னையில் தங்கலான் படப்பிடிப்பில் ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் தற்போது கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்பர் என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் தயாராகும் தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

The post சென்னையில் தங்கலான் படப்பிடிப்பில் ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு: உறவினர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vikram ,Thangalan ,Chennai ,Tangalan ,
× RELATED மாரி செல்வராஜ், துருவ் இணையும் பைசன்