×

சென்னை – மும்பை அணிகள் இடையே மே 6ம் தேதி போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது.. ரசிகர்கள் ஆர்வம்..!!

சென்னை: சென்னை – மும்பை அணிகளுக்கு இடையே மே 6ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறக்கூடிய கிரிக்கெட் போட்டி என்றால் ஆரவாரத்திற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். வருகின்ற 6ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது சென்னையின் ஓம் கிரவுண்டான சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை நேரில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எப்படி, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துமோ அதனை போலவே, சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்பது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரூ.1500, ரூ.2000 மற்றும் ரூ.2500 என டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் இரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட்டுகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

The post சென்னை – மும்பை அணிகள் இடையே மே 6ம் தேதி போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது.. ரசிகர்கள் ஆர்வம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai-Mumbai ,Chepaukam stadium ,Chennai ,IPL ,Mumbai ,Chepakkam Ground ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...