×

லெக்ஸஸ் ஆர்எக்ஸ்

லெக்ஸஸ் நிறுவனம், ஆர்எக்ஸ் என்ற ஹைபிரிட் எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் லக்ஸரி மற்றும் எப்-ஸ்போர்ட் பிளஸ் என்ற இரண்டுவேரியண்ட்கள் உள்ளன. முதலாவதாக, ஆர்எக்ஸ்350எச் லக்ஸரி வேரியண்ட், 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இவை இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 250 எச்பி பவரையும், 242 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆல் வீல் டிரைவ் கொண்டது. மணிக்கு 100 கி.மீ வேகத்தை 7.9 நொடிகளில் எட்டும்.

அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ வேகம் வரை செல்லும். இதுபோல், ஆர்எக்ஸ்500எச் எப்-ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட்டில் 2.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது. இதிலும் எலக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு சேர்ந்து அதிகபட்சமாக 371 எச்பி பவரையும் 460 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கி.மீ வேகத்தை 6.2 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ வேகத்தை எட்டும்.

ஹெட்அப் டிஸ்பிளே, 14 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன் ரூப் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக ஆர்எக்ஸ்350எச் லக்ஸரி சுமார் ரூ.95.80 லட்சம் எனவும், ஆர்எக்ஸ்500எச் எப் – ஸ்போர்ட் பிளஸ் சுமார் ரூ.1.18 கோடி எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post லெக்ஸஸ் ஆர்எக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Lexus ,
× RELATED லெக்சஸ் கார் இறக்குமதி செய்யப்பட்ட...