×

ஆர்டிஓ ஆலோசனை

 

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து ஆபிசில் பள்ளி வாகனங்கள் பராமரிப்பு குறித்து தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் ஆர்டிஓ ஆலோசனை நடத்தினார். திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை வகித்தார்.மோட்டார் வாகன ஆய்வாளர் பாமபிரியா, கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தனியார் பள்ளிகள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டும், வாகன சிறப்பு விதிகள் 2012க்கும் உட்பட்டும் முறையாக பராமரிப்பது, சாலையில் பாதுகாப்பாக இயக்குவது, விபத்து இல்லாமல் எவ்வாறு இயக்குவது உரிய ஆவணங்களை முறையாக நடப்பில் வைத்திருப்பது, கூடுதல் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் வாகனத்தின் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டு நல்ல முறையில் பயன்படுத்தப்படுவது, ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் உரிமம் நடப்பில் வைத்திருப்பது, ஓட்டுனரின் உடல் தகுதி ஆகியவை குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வுக் குழு முன்பாக குறிப்பிட்ட தேதியில் ஆஜர்படுத்தி உரிய அனுமதி பெற்று பொது சாலையில் இயக்கப்பட வேண்டியது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறையாக பராமரிக்கப்படாமல் பொதுசாலையில் இயக்கப்பட்டால் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தெரிவித்தார்.

The post ஆர்டிஓ ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : RTO ,Tiruchengode ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...