×

மண்டபம் பேரூரில் குடிநீரை வீணடித்த ஊழியர் சஸ்பெண்ட்?

 

மண்டபம், மே 3: மண்டபம் பேரூராட்சி 18 வார்டு மக்களுக்கு 13.40 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த, 18 வார்டுகளுக்கு தலா 6 வார்டுகள் வீதம் சுழற்சி முறையில் பொது குழாய், வீட்டு இணைப்புகளுக்கு தண்ணீர் திறந்து விட பேரூராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இப்பணியை முறைப்படுத்த தண்ணீர் திறந்து விடப்படும் நாட்களில், சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கையொப்பம் பெறவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மண்டபம் தென் கடற்கரை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏப்.29 இரவு மைக்குண்டு பகுதி தொட்டியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வழிந்தோடியது. இதை நிறுத்த சம்பந்தப்பட்ட ஊழியரை அப்பகுதி இளைஞர்கள் தேடிய வந்தபோது பணியில் இருந்த ஊழியர் அளவுக்கதிமான மது போதையில் இருந்தது தெரிந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. இதனால் சம்பந்தப்பட்ட ஊழியரை சஸ்பெண்ட் செய்ய செயல் அலுவலர் பரிந்துரைத்துள்ளார்.

The post மண்டபம் பேரூரில் குடிநீரை வீணடித்த ஊழியர் சஸ்பெண்ட்? appeared first on Dinakaran.

Tags :
× RELATED தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்