×

அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

பேரையூர், மே 3: பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது அத்திபட்டி, இங்குள்ள மிகவும் பிரசக்தி பெற்ற புதுமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.  கடந்த ஏப்.28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று சிங்க வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஏப்: 29,30, மே 1, ஆகிய நாட்களில் அத்திபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்கள் பால்குடம், அக்னிச்சட்டி, உருண்டு கொடுத்தல், முளைப்பாரி, மாவிளக்கு, அம்மனுக்கு ஆக்கிப் படைத்தல், அம்பாள் மயில் வாகனத்தில் பவனி, பூப்பல்லக்கில் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

அம்பாளின் மகிமையை விளக்கும் வண்ணமாக வரதராஜ் சுவாமிகள் 21 தீச்சட்டி 101 அலகு உடலில் குத்தி, வாய்ப்பூட்டுடன் , வெண்கலரதம் ரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ரதம் நேற்று முன்தினம் கேத்துவார்பட்டியில் துவங்கி, சாப்டூர் சாலை, அத்திபட்டி மாரியம்மன் தேரோடும் நான்கு ரதவீதியில் அருள்வாக்குடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கி தேர் இழுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த தேர் நேற்று புதுமாரியம்மன் கோயில் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆயிரம் கண்பானை, 21 தீச்சட்டி, அலகு குத்தி அம்மன் கரகம், உரு வாரப் பிள்ளை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

The post அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Athipatti Pudumariamman Temple Festival ,Beraiyur ,Athipatti ,Sedapatti ,Pudumariamman ,Atthipatti Pudumariamman temple festival ,
× RELATED பேரையூரில் திமுக மாணவரணி டூவீலர் பேரணி; துண்டு பிரசுரங்கள் வழங்கினர்