×

மகாத்மா காந்தி பேரன் மரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மும்பை: மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி நேற்று காலமானார். அவருக்கு வயது 89. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவர் ஒரு எழுத்தாளரும் சமூக ஆர்வலரும் ஆவார். அவரது இறுதி சடங்குகள் நேற்று மாலை நடைபெற்றது.

இவர் மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா தம்பதிக்கு மகனாக 1934ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தார். இவருக்கு துஷார் காந்தி என்ற மகன் உள்ளார். அருண் காந்தி மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post மகாத்மா காந்தி பேரன் மரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhi ,CM G.K. ,Stalin ,Mumbai ,Arun Gandhi ,Maharashtra ,Kolhapur ,CM G.K. Stalin ,
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...