×

கோபி அருகே நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் கைது

 

கோபி, மே 3: கோபி அருகே உள்ள ஓணான் கரடு பகுதியில் சேர்ந்த மக்கள் சுட்டிக்கல்மேடு – குருமந்தூர் சாலையில் பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையை தனியார் ஒருவர் விலைக்கு வாங்கி வேலி அமைத்தார். இது குறித்தான வழக்கு நடந்து வருகிறது. கம்பி வேலியை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் நம்பியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நாம்தமிழர் கட்சியினர் 13 பேரை போலீசார் கைது செயதனர்.

The post கோபி அருகே நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nam Tamil Party ,Gobi. Gobi ,Onan Karadu ,Gobi ,Chuttikalmedu ,Kurumandur ,Naam Tamil Party ,Dinakaran ,
× RELATED கோபி அருகே ஒத்தக்குதிரையில்...