×

சுங்குவார்சத்திரத்தில் மே தின பொதுக்கூட்டம்

 

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தின விழா பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பழனி, ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், முன்னாள் எம்பி திருத்தணி அரி, அதிமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கட்சி நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் தயாளன், காட்டரம்பாக்கம் மோகன், மதுரமங்கலம் பாலு, சார்லஸ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சுங்குவார்சத்திரத்தில் மே தின பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : May Day Public Meeting ,Sunguarschatra ,Sriperumbudur ,Kanchipuram District AIADMK Anna Union ,May Day Festival General Meeting ,Sriperumbudur Union ,Chungwarchatram ,May Day General Meeting ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே 9 பசு மாடுகள்...