×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஸ்வியாடெக்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். 4வது சுற்றில் ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா (28 வயது, 17வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த அலெக்சாண்ட்ரோவா 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது செட்டில் அதிரடியாக விளையாடி அலெக்சாண்ட்ரோவா சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஸ்வியாடெக் 6-4, 6-7 (3-7), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 25 நிமிடத்துக்கு நீடித்தது.

மற்றொரு 4வது சுற்றில் களமிறங்கிய பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா (24 வயது, 2வது ரேங்க்) 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் 15 வயது வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவை எளிதில் வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சக ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினாவுடன் மோதிய வெரோனிகா குதெர்மதோவா 7-5, 1-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 2 மணி, 53 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), மரியா சாக்கரி (கிரீஸ்) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஸ்வியாடெக் appeared first on Dinakaran.

Tags : Sviatek ,Madrid Open ,Madrid ,Spain ,Dinakaran ,
× RELATED இகா ஸ்வியாடெக் தொடர்ந்து நம்பர் 1: மகளிர் ஒற்றையர் தரவரிசை