×

ஐபிஎல் லீக் போட்டியின்போது விராட் கோலி, கவுதம் கம்பீர் வாக்குவாதம்!: நடத்தை விதிகளை மீறியதாக ஊதியத்தில் 100% அபராதம் விதிப்பு..!!

லக்னோ: ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு போட்டி ஊதியத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றிபெற்ற நிலையில், ஆட்டத்திற்கு பிறகு லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவர்கள் நடத்தை விதிகளை மீறியதாக கூறி ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கவுதம் கம்பீர் மற்றும் கோலி ஆகியோரின் நேற்றைய போட்டிக்கான ஊதியத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லக்னோ அணியின் நவீனுக்கு ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரு அணி ரசிகர்களும் சமூக வலைதளத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பெங்களூரு அணி நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்வினையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எதையும் செய்யக்கூடாது என்று கோலி தெரிவித்துள்ளார்.

The post ஐபிஎல் லீக் போட்டியின்போது விராட் கோலி, கவுதம் கம்பீர் வாக்குவாதம்!: நடத்தை விதிகளை மீறியதாக ஊதியத்தில் 100% அபராதம் விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Gautam Kambir ,IPL League Match ,Lucknow ,IPL ,Dinakaran ,
× RELATED ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை கொஞ்ச...