மத்தியபிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் யூடியூப் பார்த்து கொள்ளையடித்து பாலிடெக்னிக் மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சத்தர்பூர் பகுதியில் உள்ள ஓம் பிரகாஷ் என்பவர் தொழில் அதிபர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அவரையும் அவரது மணைவி மற்றும் அவரது மகள் ஆகியோரையும் கட்டிப்போட்டுள்ளனர்.துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து லாக்கர் சாவியை பெற்ற அவர்கள், பீரோவில் இருந்த ஒரு கோடி மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார் பாலிடெக்னிக் மாணவர்கள் மூன்று பேர் உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. 36 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 65 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்கள் யூடியூப் வீடியோ பார்த்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
The post மத்தியப்பிரதேசத்தில் யூடியூப் பார்த்து கொள்ளையடித்து பாலிடெக்னிக் மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் appeared first on Dinakaran.

