×

முகூர்த்த நாட்கள் முடிந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூக்கள் விலை சரிவு: கிலோ தக்காளி ரூ.5, முட்டைகோஸ் ரூ.8; மல்லி கிலோ 200க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்தை பொறுத்தோ அல்லது முக்கிய பண்டிகை காலங்களிலோ விலை அதிகரிப்பது, குறைவது என்ற நிலை காணப்படும். தற்போது, முகூர்த்த நாட்கள் முடிந்த நிலையில் காய்கறிகள், பூக்கள் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், நேற்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ.5க்கும் வெங்காயம் ரூ.10க்கும், சின்ன வெங்காயம் ரூ.35க்கும் உருளை கிழங்கு ரூ.16க்கும், முள்ளங்கி ரூ.10க்கும், முட்டைகோஸ் ரூ.8க்கும், கத்தரிக்காய் ரூ.18க்கும், காராமணி ரூ.22க்கும், சவ்சவ், புடலங்காய், சுரைக்காய், வெண்டை 15க்கும் முருங்கைக்காய் 25க்கும் பச்சை மிளகாய் 22க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுபோல, பூ மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ மல்லி ரூ.400க்கும், ஐஸ் மல்லி, காட்டுமல்லி, ஜாதிமல்லி, முல்லை ரூ.300க்கும் கனகாம்பரம் ரூ.800க்கும், அரளி பூ ரூ.200க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், பன்னீர் ரோஸ் ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி, ஜாதிமல்லி, முல்லை ரூ.200க்கும், காட்டுமல்லி ரூ.150க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும், அரளி பூ, சாமந்தி ரூ.100க்கும், பன்னீர் ரோஸ், சம்பங்கி ரூ.30க்கும் சாக்லேட் ரோஸ் 50க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

* ஒரு கட்டு வாழை இலை ரூ.800
கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு கட்டு வாழை இலை ரூ.1,500க்கும் சிறிய கட்டுவாழை இலை ரூ.800க்கும், ஒருதலை வாழை இலை ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று காலை ஒரு கட்டு வாழை இலை ரூ.800க்கும், சிறிய கட்டு வாழை இலை ரூ.300க்கும், ஒரு தலை வாழை இலை ரூ.2க்கும் விற்பனை ஆனது.

The post முகூர்த்த நாட்கள் முடிந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூக்கள் விலை சரிவு: கிலோ தக்காளி ரூ.5, முட்டைகோஸ் ரூ.8; மல்லி கிலோ 200க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Coimbade Market ,Muurat Days ,Chennai ,Coimbude Vegetable Market ,Coimbed Market ,Muurad Days ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...