×

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக சாலையோரத்தில் மனு எழுதி கொடுப்பவர்களின் வாழ்வாதாரம் காக்க கலெக்டர் உதவி

தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலக சாலையோரத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுப்பவர்களின் வாழ்வாதாரத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து மனு எழுதிக் கொடுப்பதற்கு இனி பணம் வழங்கப்படும் என்பதால் அவர்கள், இலவசமாக மனு எழுதி கொடுப்பார்கள். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூரை அடுத்து நடுநாலுமூலைக்கிணறு கிராமத்தை சேர்ந்த 80 வயதான சிவானந்தப்பெருமாள் என்ற முதியவர், மனைவியுடன் மனு அளித்தார். அதில், முதியவரின் கோரிக்கைக்கு கீழ் கைரேகை பதியப்பட்டு இருந்தது. அப்போது யார் மனு எழுதி தந்தது என கலெக்டர் கேட்டார்.

அதற்கு கலெக்டர் அலுவலகம் வரும் வழியில் சாலையோரத்தில் மனு எழுதும் நபர் எழுதி தந்ததாகவும், அதற்கு ரூ.50 கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டரே நேரடியாக சென்று மனு எழுதும் நபர்களிடம் விசாரித்தார். அப்போது மனு எழுதுவதற்கு ரூ.50 வாங்குவதாகவும், இதன் மூலம் ரூ.500 முதல் ரூ.600 வரை கிடைப்பதாகவும், அதுதான் தங்களது வாழ்வாதாரம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இனி பொதுமக்களிடம் மனு எழுதுவதற்கு பணம் வாங்க வேண்டாம். மாவட்ட நிர்வாகம் மூலம் மனு எழுதுவதற்கு மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து மனு எழுதுவதற்கு பணம் தரப்படும், என்றார். இதன் மூலம் பொதுமக்களுக்கு இனி அவர்கள், இலவசமாக மனு எழுதி கொடுப்பார்கள்.

The post தூத்துக்குடி கலெக்டர் அலுவலக சாலையோரத்தில் மனு எழுதி கொடுப்பவர்களின் வாழ்வாதாரம் காக்க கலெக்டர் உதவி appeared first on Dinakaran.

Tags : Collector's Office ,Thoothukudi ,Collector ,Sendilraj ,Thoothukudi Collector's Office ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...