×

இந்தாண்டுக்குள் தமிழர் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை அதிபர் ரணில் உறுதி

கொழும்பு: இந்தாண்டு இறுதிக்குள் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நீண்டகாலமாக இருக்கும் இன பிரச்னைக்கு தீர்வு காண இந்த ஆண்டு இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான(ஐஎம்எப்) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது அவசியம். அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போது பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. உணவு தட்டுப்பாடு எதுவும் இல்லை.நாட்டில் ஜனநாயகம் செயல்படுகிறது. எந்த வித அச்சுறுத்தல்களும் இல்லாமல் நாடாளுமன்றம் கூடுகிறது. அனைவரும் தங்கள் பணிகளை இடர்பாடுகள் இல்லாமல் மேற்கொண்டு வருகின்றனர். ஐஎம்எப்புடன் செய்த ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக புதிய சட்டம் உருவாக்கப்படும். அடுத்த ஆண்டுக்குள் பொருளாதார இயல்பு நிலை ஏற்பட்டு விடும்’’ என்றார்.

The post இந்தாண்டுக்குள் தமிழர் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை அதிபர் ரணில் உறுதி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,President ,Ranil ,India ,Colombo ,Sri ,Lanka ,Ranil Wickramasinghe ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் போட்டி: அமைச்சர் தகவல்