×

தக்காளி கிலோ ₹6க்கு விற்பனை

 

தர்மபுரி, மே 1: தர்மபுரி உழவர் சந்தையில் தக்காளி விலையில் சரிந்து கிலோ ₹6க்கு விற்பனையானது.தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகபாடி, மொரப்பூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தினமும் பாலக்கோடு, தர்மபுரி, கம்பைநல்லூர் தக்காளி சந்தைக்கு சராசரி 100 டன் தக்காளி விற்பனைக்கு வருகிறது. தர்மபுரி உழவர் சந்தையில் இம்மாத துவக்கத்தில் ₹20க்கு விற்கப்பட்ட தக்காளி கடந்த சில நாட்களாக ₹8 முதல் ₹10 வரை விற்பனையானது. இந்நிலையில் வரத்து அதிகரித்ததன் காரணமாக நேற்று மேலும் விலையில் சரிந்து ஒரு கிலோ தக்காளி ₹6 முதல் ₹8க்கு விற்பனையானது.

 

The post தக்காளி கிலோ ₹6க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Darmapuri Farmers Market ,Palakkod ,Darmapuri district ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...